2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் மீது தாக்குதல்; ஆதரித்தும் எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எல்.எம்.ஹாசீம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆதரித்தும் இன்று வியாழக்கிழமை காலை கிண்ணியாவில் இருவேறு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.

கிண்ணியா எழிலரங்கு மைதானத்திற்கு முன்னால் அப்துல் மஜீது வித்தியாலயத்திற்கு அருகாமையில் இச்சம்பவத்தைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் இவ்வார்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்கப்பட்டதை ஆதரித்து மற்மொரு பேரணி ஊர்வலமொன்று பாடசாலை மாணவர்களாலும் அவர்களின் பெற்றோர்களாலும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வூர்வலம் கிண்ணியா குறிஞ்சாங்கேணியில் ஆரம்பித்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்படாத பட்சத்தில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் வரையில் ஊர்வலமாகச் சென்று பாடசாலையை மீளத் திறக்குமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இனால் இப்பிரதேசத்தில் சுமார் 54 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பாடசாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதல்வரும் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.எல்.எம்.ஹஸனிடம் மகஜர் ஒன்றும் பெற்றோர் சார்பாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.ஹசீம், கிண்ணியா தள வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Ahamed Junaid Thursday, 30 June 2011 07:56 PM

    அரசியல்வாதிகள் சண்டித்தனம் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு பதவி உயர்வுகள் பெற விரும்புகிறார்களா ? சில அறிவு குறைந்த அரசியல்வாதிகளால் எல்லாமே பிரச்சனைதான் .

    Reply : 0       0

    A.Ali Thursday, 30 June 2011 08:09 PM

    indru nadai petta

    Reply : 0       0

    A.Ali Thursday, 30 June 2011 08:19 PM

    கல்வி அதிகாரிகளின் மரியாதையை இன்று அரசியல்வாதிகள் பறித்துவிட்டார்கள். கேவலமான ஆரசியலை முன்னெடுக்கிறார்கள். கடவுள் தான் பிள்ளைகளின் கல்வியை காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0

    nasar MSM Thursday, 30 June 2011 09:50 PM

    அடாவடித்தனம் நிலைக்காது. ஆண்டவன் என்றோ ஒருநாள் pidippan

    Reply : 0       0

    abdulmohamed Sunday, 03 July 2011 05:19 PM

    இந்த மடையர்களுக்கு என்ன பிடித்தது? முன்பு சக்கரிய சேர் , ippothu ஹசிம் சேர். என்ன nadakkirathu இவைகள் அரசியல் மேடையில்?

    Reply : 0       0

    Dean Wednesday, 06 July 2011 01:59 PM

    எல்லா விடயங்களுக்கும் அரசியல்வாதிகளை நாடும் அதிகாரிகள் , அதிபர் ஆசிரியர்கள் இருக்கும்வரை அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்துவார்கள்தான் . எனவே படித்தவர்கள் புத்தியை பாவித்து , சக்தியை பயன்படுத்த வேண்டும் . பாடசாலைகள் மாணவர்களுக்காகவே என்பதை எல்லோரும் உணர வேண்டும் . அப்போதுதான் கல்வி முன்னேறும். அது சரி முஸ்லிம் பிரதேசங்கள் மாத்திரம்தானே இப்படி இருக்கின்றன! அரசியல்வாதிகள்தான் அதிகம் சிந்திக்க வேண்டும். நடக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X