2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா கல்விப் பணிப்பாளர் மீது தாக்குதல்; பிரதேச சபை தவிசாளர் பொலிஸில் சரண்

Menaka Mookandi   / 2011 ஜூன் 30 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ, எம்.பரீட் )

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேக நபர் இன்று பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுல்லாவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபர் என பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • AHAMED JUNAID Friday, 01 July 2011 04:36 AM

    அடாவடித்தனம் செய்பவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படல் வேண்டும். அப்பொழுதுதான் ஏனையவர்களுக்கு பாடமாக அமையும். அறிவைக் கொண்டு கருமம் ஆற்ற வேண்டுமே தவிர, அடாவடித்தனத்தால் நினைத்ததை முடிக்க முனையக் கூடாது...............

    Reply : 0       0

    nasar MSM Friday, 01 July 2011 04:32 PM

    அடாவடித்தனம் நிலைக்காது. ஆண்டவன் ஒரு நாள் பிடிப்பான்.

    Reply : 0       0

    IBNU ABOO Friday, 01 July 2011 06:57 PM

    அரசியல் சாக்கடைக்குள் புகுந்தவர்கள் கண்களுக்கு கல்வி கடைச்சரக்கு போலதான் தெரியும். கற்றாரை கற்றாரே காமுறுவர். முழங்காலில் நிற்கவைத்து, பாலர்வகுப்பில் இருந்து பாடம் புகட்டவேண்டும்

    Reply : 0       0

    K.M.Nihar Wednesday, 06 July 2011 03:43 PM

    சரணடைந்த நபர் தவிசாளராக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கும் பிரதேச சபைக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. இது அவரது தனிப்பட்ட பிரச்சனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X