2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தம்பலகாமம் சிராஜ் நகரில் நூலகம் திறந்து வைப்பு

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிறாஜ் நகர் பகுதி நூலகம் இன்று சனிக்கிழமை மாலை தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியானினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட அரபா நகர். சிறாஜ் நகர், சாலிய புர போன்ற இடங்களில் பொது நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம்.சுபியானினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த வாரம் அரபா நகரில் தற்காலிக நூலகம் ஒன்றும் ஆரம்பித்து அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X