Suganthini Ratnam / 2011 ஜூலை 03 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேசத்திலுள்ள வாழைமடு, சுண்டியாறு, கல்லறப்பு மற்றும் செம்பிமோட்டைகளில் அமைந்துள்ள விவசாயக் காணிகள் தொடர்பாக ஒன்றுகூடி கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்கு வாழைமடு விவசாய சம்மேளனம் உள்ளூர் அரசியல்
தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கிண்ணியா நகரசபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த ஒன்றுகூடல் நடைபெறும்.
உள்ளூர் அரசியல்த் தலைவர்களான முன்னால் கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ.மஜீட், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாணசபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், மாகாணசபை முதல்வரும் உறுப்பினருமான
மௌலவி.எஸ்.எல்.எம்.ஹசன், மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா உட்பட பலருக்கு இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வாழைமடு விவசாய சம்மேளத்தினர் தெரிவித்தனர்.
7 minute ago
2 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
17 Dec 2025