Suganthini Ratnam / 2011 ஜூலை 03 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
கிண்ணியா வலயப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற வலய மட்டத்திலான தோட்டச்செய்கை போட்டி முடிவுகள் விவசாயப்பாட இணைப்பாளர் எம்.எம்.இபாதுள்ளாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி முதலாமிடத்தையும் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி இரண்டாமிடத்தையும் கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
இரண்டாம் பிரிவில் கிண்ணியா அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயம் முதலாமிடத்தையும் கிண்ணியா அல் இர்பான் வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் அல் அதான் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
மூன்றாம் பிரிவில் ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயம் முதாலமிடத்தையும் கிண்ணியா ஜொகரா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் உப்பாறு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025