2025 ஜூலை 02, புதன்கிழமை

கிண்ணியா விவசாய காணிகளை மீட்பதற்கான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 ஜூலை 04 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பூர்வீக சொத்தான வாழைமடு, சுண்டியாறு, கல்லறப்பு, மற்றும் செம்பிமோட்டைகளில் அமைந்துள்ள விவசாயக் காணிகளை விவசாய செய்கைக்காக மீட்டுத் தருமாறு கோரி கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை கிண்ணியா நகரசபை கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், கிண்ணியா நகரசபைத் தவிசாளர் எம்.எம்.ஹில்மி, உதவித் தவிசாளர் எம்.சீ.சபறுல்லா, கிண்ணியா பிரதேச உதவித் தவிசாளர். எம்.கே.எம்.நிஹார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிர்ச்செய்கைக்காக இக்காணிகளை துப்பரவு செய்வதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் தடையாக இருப்பதாகவும் இதனை ஏனையோர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .