2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூதூர் நிதி மோசடி; பிரதேச அரச அலுவலர் மூவர்மீதான விசாரணை இரகசிய பொலிஸிடம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 04 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சேவையளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர், பிரதான லிகிதர் மற்றும் கிராம சேவகர் என மூவர் மீதான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் மீதான விசாரணைகளை கணக்காய்வாரள் திணைக்களம், திருமலை கச்சேரியின் உள்ளக கணக்காய்வாளர் பிரிவு மற்றும் அரச நிர்வாகத் திணைக்களம் ஆகியனவும் மேலதிகமாக மேற்கொண்டு வருகின்றன.

மூதூர் பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் நிதி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே மேற்படி அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கையின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவர்களை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கான உத்தரவினை திருமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X