2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் மீளத் திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தேவை

Kogilavani   / 2011 ஜூலை 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் குறித்த சில பாடசாலைகளில் கடமையாற்றவதற்கு விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

கிண்ணியா கல்வி வலய திட்டமிடல் பிரிவினர் இவ் விண்ணப்பங்களை கோரியுள்ளனர்.

கிண்ணியா கல்வி வலயத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலையினால் மூடப்பட்டிருந்து  மீளத் திறக்கப்பட்டள்ள பாடசாலைகளில் கற்பிக்க விரும்பும் ஆசிரியாகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

தி/ பறக்கத் நகர் முஸ்லிம் வித்தியாலயம், தி/ கல்லடி வெட்டுவான் புஹாரி வித்தியாலயம், தி/ சுங்கான் குழி கலை மகள் வித்தியாலயம்,  தி/ அ'பக்கர்.எம்.பி. வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றவே விண்ண்ப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X