2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2011 ஜூலை 05 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டிக்களி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் கோயிலுக்கு சென்று போது தனியார் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

உயரிழந்தவர் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த  54 வயதான ராதா விசாலாட்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .