2025 மே 12, திங்கட்கிழமை

மார்க்க சொற்பொழிவுக்காக மாகாணசபை உறுப்பினர் மலேஷியா பயணம்

Kogilavani   / 2011 ஜூலை 10 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மலேசியா கோலாலம்பூரிலுள்ள இறைநெறி விளக்க மையத்தின் அழைப்பின் பேரில் சன்மார்க்க பேருரைகள் வழங்குவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சபை முதல்வருமான அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹசன் (அஷ்ஹாரி) இன்று மலேஷியா பயணமானார்.

இவர் மலேஷியாவில் ஒரு வார காலம் தங்கியிருந்து  பல்வேறு நகரங்களில் புனித ரமழானை வரவேற்போம், சஹாப்பாக்களின் வரலாறு, தியாகத்தில் மலர்ந்தது ரமழான், யார் இந்த செய்த்தான் போன்ற தலைப்புக்களில் அங்கு உரையாற்றவுள்ளார்.

இவர் மனிதன் புனிதனாகலாம், குர்ஆன் அறிவியல் கண்ணோட்டம் போன்ற நூல்களின் ஆசிரியர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X