Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 15 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற நுவரெலியா பாடசாலை மாணவர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய மாணவரொருவர் நிலாவெளி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், குறித்த பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11ஐச் சேர்ந்த அசேல சந்தருவன் (வயது 17), இசுறு சம்பத் (வயது 16) மற்றும் நுவன் கௌசல்ய (வயது 17) என்ற மாணவர்கள் மூவரே உயிரிழந்தவர்களாவர். சுபுன் சந்திமால் (வயது 15) என்ற மாணவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டுச் சென்ற மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களாவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago