Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 18 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களிடையே இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துமுகமாக 'தூய கிண்ணியா' செயற்பாட்டாளர்களினால் புனித ரமழான் மாதத்தில் மாபெரும் கிராஅத் போட்டி நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்போட்டியின் முதலாம் பரிவு தரம் 1 தொடக்கம் 5 வரை ஆண்கள், பெண்கள், இரண்டாம் பிரிவு தரம் 6 தொடக்கம் 11 வரை ஆண்கள், பெண்கள், மூன்றாம் பிரிவு ஆண்கள் வளர்ந்தோர்களுக்கானது ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறுவோர்களுக்கு மடிக் கணனி, புத்தக அலுமாரி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்ற பல பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
போட்டியாளர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .