Menaka Mookandi / 2011 ஜூலை 19 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ)
திருகோணமலை – பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கிடையில் அமையப்பெற்றுள்ள சோமாவதிய காட்டுப் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மரங்களை அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் சிலரை சுற்றிவளைத்துள்ள காட்டுலாகா திணைக்கள அதிகாரிகள், இருவரை கைது செய்துள்ளதுடன் மரக்குற்றிகள் மற்றும் பலகைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சிறு சிறு குழுக்களான முறையில் நீண்ட காலமாக குறித்த காட்டுப் பகுதியிலிருந்து மரங்களை அறுத்து அவற்றைப் பலகைகளாக்கி சட்டவிரோத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களில் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



24 minute ago
29 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
17 Dec 2025
17 Dec 2025