Kogilavani / 2011 ஜூலை 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மூதூரில் அமைக்கப்பட்ட புதிய முன்பள்ளிகளான நடுத்தீவு சதாம் முன்பள்ளி, பள்ளிக்குடியிருப்பு கலைவாணி முன்பள்ளி ஆகியன ACNS நெதர்லாந்து தலைவர் ஜெராட் பெரென்சன், எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸினாலும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜெராட் பெரென்சன் (தலைவர் ACNS நெதர்லாந்து), அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் டயஸ்-பணிப்பாளர் எகெட் கரித்தாஸ், மூதூர் வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் எ. உதயகுமார், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஜி.ஏ.பிரான்சிஸ், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் பே.மரியநாயகம், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் கல்விப்பிரிவு இணைப்பாளர் க.சூரியகுமாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் திலீப் யூட், ACNS உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர், முன்பள்ளி ஆசிரியர்;, மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இதன்போது, எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் உரையாற்றுகையில்,
முன்பள்ளி என்பது மிகவும் முக்கியமானது. சமூகத்தின் சிறந்த சிறார்களை உருவாக்கும் இடம் முன்பள்ளியாகும். பெற்றோர் முன்பள்ளியின் முக்கியத்துவத்தை உணரவேண்டிய காலகட்டம் இதுவாகும். ஒரு விதையை இட்டு மரமாக வளர்த்து உருவாக்குவது மிகவும் கடினமானது. அதை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் அது போல்தான் ஆரம்ப பருவமும் என்று கூறினார்.
இந்நிகழ்வின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
26 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
17 Dec 2025
17 Dec 2025