2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'திருகோணமலை மாவட்ட நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தி'

Super User   / 2011 ஜூலை 21 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் அலுவலகம் பூர்த்திசெய்துள்ளது.

2009ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை மற்றும் சேருவில பிரதேச சபை ஆகியவற்றிற்கு 36 உறுப்பினர்களை தெரிவுசெய்தற்காக 94,961 பேர்
வாக்களிக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் 31 வாக்களிப்பு நிலையங்களும் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் 26 வாக்களிப்பு நிலையங்களும் கந்தளாய் பிரதேச சபை எல்லைக்குள் 34 வாக்களிப்பு
நிலையங்களும் சேருவில பிரதேச சபை எல்லைக்குள் 13 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட வாக்குகளை எண்ணும் பணி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்படவுள்ள 17 நிலையங்களில் நடத்தப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மாலையில் 5 மணி தொடக்கம் நடைபெறும் என்றும் ஏனைய வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் வாக்குப்பெட்டிகள் வந்து சேர்நதவுடன் ஆரம்பிக்கப்படும் என்றும் உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X