Menaka Mookandi / 2011 ஜூலை 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அமதோரு அமரஜீவ)
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளை புனரமைப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா, குறித்த சிறைச்சாலைகளை எதிர்காலத்தில் முழுமையான சிறைச்சாலைகளாக பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்றும் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக யாழ். சிறைச்சாலையை புனரமைப்பதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவை எதிர்வரும் 2013ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
திருமலை சிறைச்சாலையின் அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள விடுதிகளை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
.jpg)
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025