Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 27 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தம்பலகாமம் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யக் கோரி தம்பலகாமம் பிரதேச செயலகங்களுக்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கிராம சேவர்களை தமது கடமைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அரச காணிகளை விற்காதே போன்ற சுளோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
இதன்போது, அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் கிழக்கு மாகாண சபை உதவித் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரிடம் கலந்துரையாடினர்.
இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கும் தாம் அறிவிக்க அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago