Menaka Mookandi / 2011 ஜூலை 28 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
மது போதையில் கலவரம் செய்தோர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று திருகோணமலை, மகாமயபுர சந்தியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மது போதையிலுள்ள சிலர் குறித்த பிரதேசத்தில் கலவரம் செய்வதாக பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்துக்குச் சென்றுள்ள பொலிஸார் போதையிலுள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் நிலைமை மோசமானதை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என திருகோணமலை பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
சம்பவத்தை அடுத்து போதையில் கலவரம் செய்த மேலும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் திருமலை பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியது.
24 minute ago
29 minute ago
17 Dec 2025
17 Dec 2025
neethan Thursday, 28 July 2011 06:57 PM
மதுபோதையில் ஏற்படும் இவ்வாறான அசம்பாவிதங்களை மது பாவனையை தடைசெய்வதன் மூலம் கட்படுத்தலாமல்லவா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
17 Dec 2025
17 Dec 2025