2025 மே 12, திங்கட்கிழமை

கிண்ணியா தளவைத்தியசாலையில் பெண் தாதிமார்களுக்கு தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா தளவைத்தியசாலையில் பெண் தாதிமார்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவி வருவதால், பெண் நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வைத்தியசாலையில் பணி புரிந்த பெண் தாதிமார்கள் பலர் பதிலாள் இல்லாமல் இடமாற்றப்பட்டுள்ளதால் பெண் தாதிமார்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்வைத்தியசாலையில் அதிகமான பிரிவுகளில் ஆண் தாதிமார்களே கடமையாற்றுவதாகவும் ஆண் தாதிமார்களே பெண் நோயாளர்களையும் கவனிக்கவும் வேண்டியுள்ளது.

எனவே இது தொடர்பில் இப்பிரதேச அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என்பன கவனத்திற்கொண்டு போதியளவு பெண் தாதிமார்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X