2025 மே 08, வியாழக்கிழமை

ஜெலிக்னைட் குச்சிகளுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

ஜெலிக்னைட் குச்சிகளுடன் மூதூர் கடற்பரப்பில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களிடமிருந்து அதிசக்திவாய்ந்த ஜெலிக்னைட் குச்சிகள் - 09, டெடனேடர்கள் - 14, சார்ஜர்கள் - 02 போன்றனவும் கைப்பற்றப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஜெலிக்னைட் குச்சிகளை மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தவே தாம் அவற்றைக் கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்விருவரையும் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X