2025 மே 08, வியாழக்கிழமை

குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் சட்டவிரோதமாக கடமைகளை பொறுப்பேற்பு: உபதலைவர் தௌபீக்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

குச்சவெளி பிரதேச சபைத் தலைவராக தெரிவாகியுள்ள ஏ.முபாரக் என்பவர் சட்டரீதியற்ற முறையில் கடமைகளைப் பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றார் எனவும் அவரது பதவி உள்ளூராட்சிமன்றச் சட்டத்துக்கு புறம்பானது என்றும் குறித்த பிரதேச சபையின் உபதலைவரான ஏ.தௌபீக் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த உபதலைவர் தௌபீக்இ 'கடந்த ஜனவரி மாதம் 06ஆம் திகதி குறித்த பிரதேச சபை கலைக்கப்படும் வரையில் நானே தலைவராக இருந்தேன். அப்போது ஏ.முபாரக் என்பவர் அந்த பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.

குறித்த நபர்இ உள்ளூராட்சிமன்ற சட்டத்துக்கு புறம்பாகச் செயற்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றமை சட்டவிரோதமானது' என உபதலைவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X