2025 மே 08, வியாழக்கிழமை

சுய தொழிலை ஊக்குவிக்க துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு

Super User   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (08.08.2011) திங்கட்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தனர்.

முதற் கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இத்திட்டம் மாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X