2025 மே 08, வியாழக்கிழமை

மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான கடன் உதவி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா கண்டலடியூற்றுக் கிராமத்தில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மீன் வளர்ப்புக்களை மேற்கொண்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக 50 பேருக்கு கிண்ணியா இலங்கை வங்கி கிளையினரால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண  பொதுமுகாமையாளர் சமிந்த வெலகெதர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய வங்கி உதவி முகாமையாளர் சுசந்த ஆரியரட்ன, யூ.எஸ்.எயிட் பணிப்பாளர் ஜேம்ஸ் வேண்டர், திட்ட முகாமையாளர் டெனிக் லீ, கிண்ணியா இலங்கை வங்கி முகாமையாளர் சுவாமிநாதன் சர்மா, கடன் வழங்கும் மாவட்ட அதிகாரி கே.முரளிதரன், கிண்ணியா கடன் வழங்கும் அதிகாரி ஏ.எம்.சாஹீர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X