Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்,அமதோரு அமரஜீவா)
திருகோணமலை நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை இரண்டு மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர சபையின் தலைவர் தம்மை இழிவுபடுத்துவதாகவும் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தனக்கு வாக்களிக்வில்லை எனக் காரணம் காட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு 10 கோரிக்கைகைள முன்வைத்து மகஜர் ஒன்றையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தமது கோரிக்கைகள் நிறைவேறத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது விடயமாக திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசாவை தொடர்பு கொண்டு கேட்ட போது இப்படி ஒரு போராட்டம் நடைபெறுவது எனக்குத் தெரியாது எனக் கூறினார.
அதேவேளை 'சுத்திகரிப்பு தொழிலாளர்கள் காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரை வேலை செய்கின்றார்கள். இவர்களுக்கு மாதாந்தம் 21,000 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது. இவர்கள் 5 மணி நேரமே வேலை செய்கின்றார்கள். எட்டு மணி நேரம் வேலை செய்வதற்கு கேட்கப்படும் போது அவர்கள் மறுக்கின்றனர். வேலை நேரத்தில் ஒழுங்காக வேலைகளில் ஈடுபடுவதில்லை. சிலர் மதுபோதையிலும் இருக்கிறார்கள் என்றார். தான் இவர்களை மேற்பார்வை செய்வதை பொறுக்காத இவர்கள் 'முந்தைய நகர சபை தலைவர்கள் எந்தவிதமான மேற்பார்வை நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. நீங்கள் ஏன் எங்களை மேற்பார்வை செய்கின்றீர்கள்?' எனக் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.படப்பிடிப்பு:- அமதோரு அமரஜீவா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
1 hours ago