2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

குச்சவெளியில் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் இரு பிரதேசவாசிகள் மீது பொதுமக்கள் தாக்குதல்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், அமதோரு அமரஜீவ)

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளான இரு பிரதேசவாசிகள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இறக்கக்கண்டி, வாழையூற்றுப் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையான அருமைநாயகம் கந்தையா (வயது 42) மற்றறும் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த அருளானந்தம் அரவிந் (வயது 24) ஆகிய இருவருமே பொதுமக்களால் தாக்கப்பட்டவர்களாவர்.

கந்தையா அருமை நாயகம் என்பவர் வெங்காயச் செய்கையில் ஈடுபடுபவபர் எனவும் இன்று காலை தனது தோட்டத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, அருளானந்தம் அரவிந் என்பவர் நிலாவெளி, 10ஆம் கட்டையைச் சேர்ந்தவர் என்றும் இவர் 10ஆம் கட்டையில் வைத்து சிலரால் தாக்கப்பட்டதாகவும் குச்சவெளிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X