2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியா வைத்தியசாலை சம்பவம் தொடர்பாக ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.பரீட்)
கிண்ணியா வைத்தியசாவையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இடம்பெற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண ஆளுணர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிண்ணியா வைத்தியசாலைக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதும், இவ்வாறான போன்று சம்வங்கள் மேலும் ஏற்படாது தடுப்பதுக் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண ஆளுணர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X