Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தில் புதிய படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பிரிகேடியர் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 224ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஹப்புஆரச்சி தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அண்மைய நாட்களாக கிண்ணியாவில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து அப்பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேலதிகமாக இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேலதிக படையினரை கட்டுப்படுத்தி பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே மேற்படி படையணி உருவாக்கப்பட்டடுள்ளது.
இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படையணி, ஏற்கனவே அங்கு செயற்பட்டு வரும் படையணிகளுடன் இணைந்து செயற்படாது தனித்துவமாகவே பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரதேசத்துக்குள் உட்புகுந்த மர்ம மனிதர்கள் காரணமாக கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதனால் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதனையடுத்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், திருகோணமலை மாவட்ட பொதுச் செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Amadoru Amarajeewa)
hakeem Monday, 22 August 2011 09:14 PM
என்னத்துக்கு கிரீஸ் மனிதனை பாதுகாப்பதற்கா???
Reply : 0 0
Abdul salam Monday, 22 August 2011 09:16 PM
புதிய படையணி யாரை பாதுகாக்க அனுப்பப்பட்டுள்ளது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
29 minute ago
30 minute ago