2025 மே 08, வியாழக்கிழமை

திருமலையில் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்மேளனத்தின் ஆரம்பக்கட்ட நிகழ்வுகள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், எஸ்.எஸ்.குமார்)
ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்மேளனம் திருகோணமலையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதற்கான ஆரம்ப வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  திருகோணமலை புல்மோட்டை வீதி லவ்லேனில் அமைந்துள்ள ஜேக்கப் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின்  புகைப்படக் கண்காட்சியும், சிறந்த புகைப்பட பிடிப்பாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜே விக்கிரம, கடற் தொழில் நீரியல் வளத் துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் திருகோணமலை வர்த்தக சம்மேளனப் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X