Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
சம்பூர் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் அனைத்தும் பூர்வீக காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது பற்றி கருத்து வெளியிடுகையிலே மேற்கண்டவாறு சம்பந்தன் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் சொந்த கிராமங்களிலுள்ள சொந்த வீடுகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். தரிசாக கிடக்கும் நிலத்தை அனல் மின் நிலையம் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தலாம். மக்களின் பூர்வீக காணிகளை அனல் மின் நிலையம் நிர்மாணிக்க பயன்படுத்த கூடாது என அவர் கூறினார்.
அண்மையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது இது தொடர்பில் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Manithan Wednesday, 07 September 2011 04:41 AM
அய்யா என்ன சொல்றீங்க, சம்பூர்ல மக்களை குடியேற்றக் கூடாது என்பதர்த்காகத்தனே அனல் மின் நிலையமே ஆரம்பிக்கப் போறோம்.
Reply : 0 0
Nirmalalraj Wednesday, 07 September 2011 04:43 AM
அமெரிக்கா பெற்றோலுக்காக ஈராக்கில் யுத்தத்தை ஊக்குவித்தைப் போல, மின்சாரத்திற்காக இலங்கை யுத்தத்தை கையாண்டதா இந்தியா?
Reply : 0 0
meenavan Wednesday, 07 September 2011 10:33 AM
பெட்ரோல், மின்சாரம் யுத்தத்திற்கு பலிக்கடாக்கள் பொதுமக்கள் என்று சொல்லுங்க?
Reply : 0 0
மூதூர் அமுதன் Wednesday, 07 September 2011 07:27 PM
ஐயா நீங்கள் பலமுறை சம்பூர் மக்களை அவர்களின் சொந்த பூமியில் மீளகுடியே றவேண்டும் என்று பலமுறை கூறியுள்ளீர்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை?
Reply : 0 0
மௌனி Wednesday, 07 September 2011 08:02 PM
மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்து என்ன பயன்? அரசாங்கம் இருக்க வேண்டுமே. இருக்குமா?
Reply : 0 0
NAKKIRAN Thursday, 08 September 2011 03:02 PM
ஐயா நீங்கள் சொல்வது உண்மையானால் ஒரு வாரம் அங்குபோய் தங்க முடியயுமா?.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago