2025 மே 07, புதன்கிழமை

திருமலை ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய தலைவராக றபாய்தீன் தெரிவு

Super User   / 2011 செப்டெம்பர் 11 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று  ஞாயிற்றுக்கிழமை  காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய தலைவராக  ஏ.எல்.றபாய்தீன், செயலாளராக எஸ்.கீதபொன்கலன், பொருளாளராக  விக்கிரமதிலக ஆகியோர் தெரிவு  செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி நீர்பாசன கிராமிய மின்சாரம், வீடமைப்பு  அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதி ஒதுக்கீட்டில்  பெற்றுக்கொள்ளப்பட உள்ள புகைப்பட கருவிகளை அங்கத்தவர்கள் மத்தியில் பகிர்ந்தளிப்பது எனவும் .தீர்மானிக்கப்பட்டது.  இதற்காக  ஒரு குறிப்பிட்ட தொகை  அங்கத்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியில் மேலதிக கருவிகளை  பெற்று அங்கத்தவர்கள் மத்தியில் பகிர்ந்தளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X