2025 மே 07, புதன்கிழமை

நகை கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா மாஞ்சோலை பிரதேசத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கிண்ணியா பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

மாஞ்சோலை பிரதேசத்தில் கடந்த வாரம் பட்ட பகலில் வீடு புகுந்து சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 13 பவுன் நகைள் திருடப்பட்டதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கிண்ணியா பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர் மூதூர் பிரதேச கடையொன்றில் குறித்த நகைகளை விற்பனை செய்கின்ற போது பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X