2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் யுனெப்ஸ் நிறுவன பணிப்பாளர் கலந்துரையாடல்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்தில் யுனெப்ஸ் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்த்திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் யுனெப்ஸ் நிறுவன பணிப்பாளர் பிரான்ஸ் கொஸ் ஜெகொப்  சந்தித்து கலந்துரையாடினர்.

திருகோணமலையில் முதலமைச்சர் செயலகத்தில் வைத்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்ற திண்மக்கழிவ முகாமைத்துவம் தொடர்பாக பேசப்பட்டது.

மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக எதிர்காலத்தில் பல செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் யுனெப்ஸ் பணிப்பாளர் இச் சந்திப்பில் குறிப்பிட்டார் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X