2025 மே 07, புதன்கிழமை

சம்பூரிலிருந்து இடம்பெயரந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயரந்து  மணல்சேனை  நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தின் 22ஆவது படை பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 22ஆவது படை பிரிவின் திருகோணமலை கட்டளை தளபதி பிரிஹேடியர் ஹெட்டிஆராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த நலன்புரி நிலையத்தை சேர்ந்த மாணவர்களுக்கான ஒருநாள் சுற்றுலாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த மாணவர்கள் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்கு துறை, பிறிமா மா ஆலை, கிண்ணியா பாலம், திருக்கோணேஸ்வரம் கோயில் மற்றும் கன்னியா வெந்நீர் ஊற்று ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சுமார் 108 மாணவர்கள் கலந்துகொண்ட இச்சுற்றுலாவினை  22ஆவது படை பிரிவின் திருகோணமலை கட்டளை தளபதி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஏற்படுத்தி இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X