2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநரை இந்திய கடற்படை தளபதி சந்திப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

இந்திய-இலங்கை கூட்டுக் கடற்படை ஒத்திகைக்காக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் எச்.சி.எஸ் பிஷத் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமாவை அவரது ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது,  கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரம இந்தியக் கடற்படை தளபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

இந்திய-இலங்கை கூட்டுக் கடற்படை ஒத்திகையானது கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X