2025 மே 07, புதன்கிழமை

'இந்தியா மற்றும் வியட்நாம் கிழக்கு மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்ய தயார்'

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

 

இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கிழக்கு மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த மற்றும் வியட்நாம் தூதுவர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

"இச்சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக" அவர் குறிப்பிட்டார்.

"கிழக்கு மாகாணத்திற்ன்  பின் தங்கிய கிராமங்களுக்கு போக்குவரத்தை மேற்கொள்வதற்வதற்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் வாகன உதவிகளை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளதாகவும்" மாகாண அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இச்சந்திப்பு திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X