2025 மே 07, புதன்கிழமை

வலது குறைந்த பெண்களுக்கான செயலமர்வு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

வலது குறைந்த பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிண்ணியா மற்றும் தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வலது குறைந்த பெண்களுக்கான மூன்று நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை நெடுத்தீவு பொதுமக்கள் நலன்பேண் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வலது குறைந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வுக்கு இந்நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் என்.ஜிஹாத் தலைமை வகித்தார்.

இதன் வளவாளர்களாக பிரதேச செயலாளர் எம்.முபாரக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்ஸில், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ்.கபீபுள்ளா ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X