2025 மே 07, புதன்கிழமை

பல்கலைக்கு தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு கௌரவம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

நாளை காலை 09.30 மணியளவில் திருமலை சாஹிரா கல்லூரியில் இடம்பெறும் இந்நிகழ்வை முஸ்லிம் கல்வி அபிவிருத்து ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.  மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 2 மாணவர்களும், பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்ட்ட 8 மாணவர்களுமே இவ்வாறு கௌரவிக்படவுள்ளனர்.

இதன் மற்றொரு அம்சமாக அண்மையில் கலாநிதி பட்டம் பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எப்.எம்.அஸ்ரப் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X