Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
'இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான உறவு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பிராந்தியத்தில் இலங்கையின் அபிவிருத்தி குறித்த உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்க காத்திருக்கின்றது. இதன் ஒரு கட்டமாகவே திருகோணமலை, சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்திற்கு இந்தியா ஏழு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது' என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.
'கடந்த மூன்று நாட்களாக இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கடற்போர் ஒத்திகை நிகழ்வுகளை திருகோணமலையில் நடத்தியதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு தொடர்பிலான புரிந்துணர்வை வலுப்படுத்த விரும்பியுள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 1200 கணினித்தொகுதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரூபா எழுபது மில்லியன் பெறுமதியான கணினித் தொகுதிகள் வழங்கப்பட்டதுடன் திருகோணமலை, கோணேசர்புரி பகுதியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த ஆயுள்வேத கற்கை பிரிவிற்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான ஆயர்வேத மருந்து வகைகளும் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து அனைவர் மத்தியிலும் உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Mohammed Hiraz Saturday, 24 September 2011 09:24 PM
ஆமா ... அதேபோல முன்னேர தடை விதித்து சிறுபான்மையோரை சீண்டிவிட்டு தீவிரவாதத்தையும் பிரச்சினையையும் ஓங்கவைக்கும் மறைமுக செயலை எப்ப நிறுத்த போரிங்க எங்களுக்கு உங்க உதவியை விட உங்க மறைமுக உபத்திரங்கள நிறுத்தினா போதும். ஒரு இருபது வருடத்திற.குள் நாங்க உங்களுக்கு கோடான கோடியா சும்ம கொடுப்பம் உங்க நாட்டு வளர்ச்சிக்கி!!!!
Reply : 0 0
nakkiran Sunday, 25 September 2011 01:20 PM
வைக்கோல் பெட் நாய்போல , தானும் உதவார் , உதவுரங்களும் விடார் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago