Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
'தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பின் கீழ் செயலமர்வு ஒன்று நேற்று சனிக்கிழமை கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வில் கிண்ணியா பிரதேசத்தை மையமாகக் கொண்டு அரசியல், கல்வி, நீதி மற்றும் நிர்வாக விடயங்களில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கு பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்பான பொதுவான அபிப்பிராயங்கள், சமயங்கள், மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் செல்வாக்குகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்பாடுத்துகின்றன என்பன பற்றிய கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.
கிண்ணியாவில் பல்வேறு துறைகளை சார்ந்த முப்பது பேர் கலந்து கொண்ட இச்செயலமர்வானது இலங்கை அபிவிருத்திற்கான ஊடக ஒன்றியத்தின் சட்ட ஆலோசகர் எஸ்.எம்.என்.எஸ்.ஏ.மர்சூன் மௌலான மற்றும் அதன் ஆராய்ச்சி திட்ட அதிகாரி எம்.என்.எம்.பஸ்லான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago