Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிழக்கு மாகாணத்தில் தேசிய சுகாதார வாரத்தை விரிவான முறையில் அனுஷ்டிக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள 120 வைத்தியசலைகளில் சுகாதார வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சுகாதார வார ஏற்பாடுகளை இவ் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை, அம்பாறை, கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பிராந்திய சுகாதார சேவை பணிமனைகள் ஊடாக அவ்வப்பகுதி சுகாதார வார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக இறுதித் தீர்மானிக்கும் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை சுகாதார அமைச்சில் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், உதவிச் செயலாளர், மாகாண, மற்றும் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
sawaheer Tuesday, 27 September 2011 10:53 PM
இவரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago