Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி - அடம்போடை கிராமத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் கழிவு உடற்பாகங்கள் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலும் அதனை அடுத்துள்ள அரச காணியிலும் எவ்வித சுகாதார பாதுகாப்புமற்ற நிலையில் இறைச்சி வெட்டுபவர்களால் வீசி எறியப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இறச்சிக்காக எருமை மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் மாடு வெட்டுபவர்கள் நீண்ட காலமாக எருமை மாடுகளையும் இறைச்சிக்காக வெட்டி வருகின்றனர், மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையால் அடம்போடை கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான குடும்பங்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ள அதேவேளை, கழிவுகள் பிரதேசத்தின் வயல் நிலங்களிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.
நிலாவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட உல்லாசப் பிரயாண விடுதிகளில் இருந்து அகற்றப்படும் பெருந்தொகையான பிளாஸ்ரிக் வெற்றுப் போத்தல்கள் வாகன ரயர்கள் என்பனவும் பொதுவான கழிவுப்பொருட்களும் மேற்படி இடத்தில் மிக நீண்ட காலமாக வீசி எறியப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
மேற்படி சுகாதார கேடான செயற்படுகளால் பிரதேச மக்கள் அடிக்கடி காய்ச்சல் சுவாசம் தொடர்பான நேய்கள், வாந்தி மற்றும் மயக்கம் ஆகிய சுகாதார குறைவுகளை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் தொடர்ச்சியான துர்நாற்றம் பிரதேசம் எங்கும் வீசுவதால் குழந்தைகள் உட்பட அனைத்து பிரதேச வாசிகளும் மிகுந்த கஸ்டத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய குச்சவெளி பிரதேச சபை தலைவர், அது பற்றி இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக அறியமுடியவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago