2025 மே 07, புதன்கிழமை

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியே மக்களுக்கு வைத்திய உதவிகள்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள் குழு சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி மக்களுக்கு அவசர வைத்திய உதவிகளை வழங்குவதற்காக இன்று புதன்கிழமை கிளிவெட்டிக்கு சென்று வைத்திய உதவிகளை வழங்கியது.

சம்பூர் பிரதேசத்திலிருந்து 2006ஆம் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல் மற்றும் கட்டைப்பறிச்சான் ஆகிய கிராமங்களில்
அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து சென்ற வைத்திய அதிகாரிகள் குழுவில் 06 வைத்திய நிபுணர்கள், 12 வைத்திய அதிகாரிகள், 08 தாதிகள் உள்ளிட்டேர் சென்றுள்ளனர். இதன்போது, சுமார் 600 பேருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X