2025 மே 07, புதன்கிழமை

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார விருத்தி தொடர்பில் கண்காணிக்க கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளை சமூகங்களுடன் ஒருங்கமைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் கண்காணிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது.

ஐ.ஓ.எம். நிறுவனத்தின் உதவியின் கீழ் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி உற்பத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடித்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடல் திருகோணமலை மாவட்டத்தில் பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலும் நடைபெற்றது. இதுபோன்று 22ஆவது படைப்பிரிவு படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.

மேற்படி சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் என்.செந்தீபன் தலைமையில் அமைச்சின் செயலாளர், மற்றும் திட்டப் பணிப்பாளர், துறைசார்ந்த மாகாண பணிப்பாளர்களும் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின்
மாகாண பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் டீ.ஐ.ஜீ.வைத்தியலங்கார, பிரிகேடியர் ஹெட்டியாரச்சி போன்றவர்களையும் இதில் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X