2025 மே 07, புதன்கிழமை

பாடசாலைகளில் சுகாதாரக் கழகங்களை அமைப்பதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
அரசாங்க பாடசாலைகளில் சுகாதார கழகங்களை அமைக்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைய கிண்ணியா பிரதேச பாடசாலைகளில் சுகாதாரக் கழகங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெளிவுருத்தும் செயலமர்வு நேற்று வியாழக்கிமை கிண்ணியா வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆர்.எம்.நஸீம் தலைமையில் குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இச்செயலமர்விற்காக 40 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள சிறுவர் பராமரிப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் ஏ.ஏம்.எம்.அஜீத், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.சமீம், ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.லாபீர், உதவிக்கல்விப் பணிக்காளர் எம்.எஸ்.எம்.அரூஸ் ஆகியோர் இதில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X