2025 மே 07, புதன்கிழமை

சர்வதேச எழுத்தறிவு தினப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலய முறைசாரக் கல்விப்பிரிவினர் அண்மையில் நடாத்திய சர்வதேச எழுத்தறிவு தினப் போட்டியில் மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மணவர்களும், மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குமான  பரிசளிப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கிண்ணியா தி அல்-றவ்ளா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள தி, அல்-றவ்ளா வித்தியாலயம், தி, பூவரசந் தீவு மகா வி;த்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கிண்ணியா தி-அல்-றவ்ளா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.சுபையிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய முறைசார கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.ஹசன், உதவி திட்டமிடல் அதிகாரி எம்.எஸ்.ஏ.அனிபா, மற்றும் விசேட தேவையுடைய கல்வி  அதிகாரி ஏ.ஆர்.எம்.ஹஸ்ஸாலி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தி-அல்-றவ்ளா வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X