2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் நிலாவெளி தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 06 மாத காலமாக நடைபெற்று வந்த யுவதிகளுக்கான தையற் பயிற்சிநெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும்  தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிநெறியில் வேலூர், வாழையூற்று, நிலாவெளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 யுவதிகள் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில்  எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஜி.ஏ.பிரான்சிஸ் திட்ட உத்தியோகத்தர் பே.மரியநாயகம், நிறுவனத்தின் ஊழியர்கள், நிலாவெளி பங்குத்தந்தை அருட்பணி லொய்ட், உதவி பங்குத்தந்தை அருட்பணி பிரிட்டோ, நிலாவெளி கரித்தாஸ் கன்னியர்மடத்தின் அருட்சகோதரி, நிலாவெளி சென்ஜோசப் வித்தியாலயத்தின் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X