2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸ் படையணியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கஜன்)

திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம், ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸ் படையணியின் சிறுவர் பிரிவில் இணைந்து கொண்டவர்களுக்கு சின்னங்களை அணிவித்தது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை சின்னங்களை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. சென்  ஜோன்ஸ் அம்பீயுலன்ஸ் படையணியின் சிறுவர் பிரிவில் புதிதாக  இணைந்து கொண்ட 40 பேருக்கு  சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

சென்  ஜோன்ஸ் அம்பீயுலன்ஸ் படையணியின் உதவி மாவட்ட ஆணையாளர்களான சாம.பாஸ்கரன், எஸ்.கௌரிமேனன்,  திருகோணமலை மாவட்ட சாரணர் சங்க  உதவி மாவட்ட ஆணையாளர் சி.சசிகுமார், கல்லூரி அதிபர் இ.புவனேந்திரன்,  பிரதி அதிபர் இ.முருகதாஸ், ஆரம்பப்பிரிவு உதவி அதிபர் ந.சங்கரதாஸ் ஆகியோர்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இச்சிறார்களுக்கான சின்னங்களை அணிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X