2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமலையில் பெண்கள் மாநாடு

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்கள் மாநாடு ஒன்று இன்று அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தம்பலகாமம், திரியாய், முருகாபுரி, மூதூர், பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் கலந்து கொண்டன.

திருகோணமலை மனித உரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான வணக்கத்திற்குரிய சீ.யோகேஸ்வரன் அடிகளார் பிரதம அதிதியாகவும், திருகோணமலை மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் இணைப்பாளர் காயத்திரி நளினநாந்தன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

பெண்கள் உரிமைகள், துஸ்பிரயோகங்கள் என்பனவற்றை வெளிப்படுத்தும் ஆற்றுகைகள் இங்கு அரங்கேற்றப்பட்டன. சிறுவர்கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறுவர் உரிமைகள், சிறுவர் தூஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆற்றுகைகளை அங்கேற்றினர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X