Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
திருகோணமலை நகரின் பிரதான வீதி இரு மருங்கிலும் தலா ஏழு அடி வீதம் 14 அடிகள் அகலமாக்கப்படவிருக்கின்றது. நெல்சிப் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீதியை அகலமாக்கும் வேலை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
பிரதான வீதியின் குடியிருப்பாளர்களுடன் இன்று சனிக்கிழமை காலை நகரசபையின் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்திய கலந்துரையாடலில் அவர் இத்தகவலை வெளியிட்டார். குடியிருப்பாளர்களின் சம்மதத்தைப் பெறுவதற்காக தலைவர் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
வீதி அகலமாக்கும் வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டம் ஜனவரி முதலாம் திகதி
திருகோணமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் பின்னர் மடத்தடி வரையான பிரதான வீதியை அகலமாக்கும் வேலை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
உடைக்கப்படும் வீடுகள் மற்றும் சுவர்களை மீண்டும் கட்டுவதை வீட்டு உரிமையாளர்களே தங்கள் சொந்தச் செலவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு நகரசபை பணம் தரமாட்டாது என்றும் தலைவர் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் நகரசபையின் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் உறுப்பினர்களான த.கௌரிமுகுந்தன், சத்தியசீலராசா மற்றும் எம்.சனூன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதான வீதியின் குடியிருப்பாளர்கள் வீதியை அகலமாக்க நகரசபை எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண சம்மதத்தை கூட்டத்தில் வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
37 minute ago
1 hours ago