2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பௌர்ணமிக் கவியரங்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

பௌர்ணமிக் கவியரங்கு திருகோணமலை புனித சவேரியார் மகாவித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலையிலிருந்து வெளியாகின்ற 'நீங்களும் எழுதலாம்' என்ற சஞ்சிகையின் வாசகர்
வட்டத்தினால்  பௌர்ணமி தோறும் இக்கவியரங்கு நடத்தப்படுகிறது.

சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்..ஆர்.தனபாலசிங்கம் இக்கவியரங்கத்திற்கு தலைமை வகித்தார். 'பார் போற்றும் பாரதி' என்ற தலைப்பிலான கவியரங்குக்கு மூத்த கவிஞர் கலாபூஷணம் தம்பி தில்லை முகிலன் தலைமை வகித்தார்.  கவிஞர்களான பெரிய ஐங்கரன், ஆன்கியூறி, திருச்செந்தூரன், கேதீஸ்வரன், மதிவதனி ஆகியோர் இக்கவியரங்கத்தில் பங்குபற்றியுள்ளனர்.

நிறைவாக அமரர்களான பேராசிரியர் க.கைலாசபதி, கவிஞர்சு, வில்வரத்தினம் ஆகியோர் பற்றிய
நினைவுரைகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X